உலகளவில் 50 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் ஆகிய 5 நாடுகளில் மட்டும் ஒரே நாளில் 2 லட்சத்து 25 ஆயிரம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

உலகளவில் 50 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
கோப்புப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 926 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஸ்பெயினில் பாதிப்பு 2 லட்சத்து 77 ஆயிரமாகவும், உயிரிழப்பு 27 ஆயிரத்து 650 ஆகவும் அதிகரித்துள்ளது. இத்தாலியில் கடந்த மார்ச் 9 ஆம் தேதிக்கு பிறகு முதல்முறையாக, ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக குறைந்துள்ளது.


அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் ஆகிய 5 நாடுகளில் மட்டும் ஒரே நாளில் 2 லட்சத்து 25 ஆயிரம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Also see...

First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading