இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 73-ஆக அதிகரிப்பு: அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு நீங்கியுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். அவர், தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 73-ஆக அதிகரிப்பு: அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிப்பு
கோப்புப் படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. நேற்று வரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக இருந்தது.

இந்தநிலையில், இன்று இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பை இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அந்த அறவிப்பின்படி, கேரளாவில் 17 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேரும், டெல்லியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு நீங்கியுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். அவர், தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்.


மேலும், கர்நாடகா, பஞ்சாப், லடாக் ராஜஸ்தான், தெலங்கான ஆகிய மாநிலங்களிலும் ஓரிருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த 17 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேருக்கு ஹரியானாவிலும், 2 பேருக்கு ராஜஸ்தானிலும், ஒருவருக்கு உத்தரப் பிரதேசத்திலும் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Also see:

First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading