Coronavirus | தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு...

Coronavirus | தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் ஒரு மாணவர் மற்றும் மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13 பள்ளிகளைச் சேர்ந்த 187 மாணவர்களும், 4 கல்லூரியை சேர்ந்த 38 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மேலும் ஒரு பள்ளியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேடிவ் என்கிற தனியார் பள்ளியில் மூன்று ஆசிரியர்களுக்கும், ஒரு மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க... சென்னையில் ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு கொரேனா... 1100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 12 நாட்களில் 135 சதவீதம் அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் செய்தியாளர்: எஸ்.குருநாதன் 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: