மாநகரப் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் அதிகாரிகள்

வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் அதிகாரிகள்

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மீண்டும் வார்டுவாரியாக, வீடு தேடிச் சென்று காய்ச்சல் கண்டறிந்து வருகின்றனர். இந்த கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சியில் தினசரி தொற்று 300க்கும் மேல் தொற்று தொடர்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக திருச்சி மாநகர் பகுதிகளில் அதிக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மீண்டும் வார்டுவாரியாக, வீடு தேடிச் சென்று காய்ச்சல் கண்டறிந்து தகுந்த நடவடிகை செய்து வருகின்றனர்.

இந்த கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று முதல்  22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி தற்போது, வார்டு எண். 23 செபஸ்தியார் கோவில் கேம்ஸ் டவுன், வார்டு எண்.23 செபஸ்தியார் கோவில், வார்டு எண்.46 ஹன்சா அபார்ட்மெண்ட், வார்டு எண்.52 பாரதி நகர், வார்டு எண்.50 பார்கவி அபார்ட்மெண்ட், வார்டு எண்.6 பாரதியார் பள்ளி, வார்டு எண்.1 ஆதி ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட், வார்டு எண்.35 எஸ்.ஆர்.எம். ஹோட்டல், வார்டு எண். SETC டிப்போ, வார்டு எண்.9 மேற்கு மேலசிந்தாமணி, வார்டு எண்.21 ராமசாமி தேவர் மருந்தகம், வார்டு எண்.30 தங்கேஸ்வரி நகர், வார்டு எண்.40 ராம்ஜி நகர், வார்டு எண்.55 ரவிந்திரா அபார்ட்மெண்ட், வார்டு எண்.28 காமராஜ் நகர் பள்ளி, வார்டு எண்.12 பெரியார் தெரு, வார்டு எண்.64 மலைக்கோவில்ஆகிய இடங்களில் நேற்று காலை நடைபெற்றது.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க... ஆரணியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தடுப்பூசி போட்டு கொண்டனர்...

நேற்று பிற்பகல்:  வார்டு எண்.34 டி.வி.எஸ் டோல்கேட், வார்டு எண்.55 பாலையம் பஜார், வார்டு எண்.12 வ.ஊ.சி தெரு ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது,

இன்று காலை: வார்டு எண்.51 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.2 உத்திர தெரு, வார்டு எண்.34 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.8 பூசாரி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கமலா நேரு நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.31 பஞ்சாயத்து போர்டு அரசு பள்ளி, வார்டு எண்.39 ஆர்.எம்.எஸ் காலனி எடமலைப்பட்டி புதூர், வார்டு எண்.56 டிரசர் அபார்ட்மெண்ட், வார்டு எண்.61 வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.63 வின் நகர் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று மாலை : வார்டு எண்.56 தில்லைநகர் 11வது கிராஸ், வார்டு எண்.18 பெரியகம்மாலத்தெருகாலை 21.04.2021 வார்டு எண்.26 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 பத்மாவதி அபார்ட்மெண்ட், வார்டு எண்.53 கோடாப்பு அங்கன்வாடி மையம், வார்டு எண்.50 குத்புஷா நகர், வார்டு எண்.1 சன்முகா பள்ளி, கஞ்சியம்மன் பள்ளி,  வார்டு எண்.38 கே.சாத்தனூர், வார்டு எண்.43 காஜா நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.9 வென்னீஸ் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 வரதராஜ பெருமாள் கோவில், வார்டு எண்.41 கே.கே.நகர், இ.பி. காலனி, வார்டு எண்.57 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.62 பாத்திமாபுரம் சர்ச், வார்டு எண்.63 சக்தி நகர்.மாலை 21.04.2021வார்டு எண்.46 எஸ்.பி.ஓ. காலனி, வார்டு எண்.3 தேவி பள்ளி, வார்டு எண்.57 சாலை ரோடு, வார்டு எண்.16 லஸ்கர் தெரு.காலை 22.04.2021வார்டு எண்.25 கீழபுதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 பார்ஷன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.52 திறந்தவெளி நூலகம், வார்டு எண்.19 ஜெயில் பேட்டை, வார்டு எண்.5 அம்மா மண்டபம், வார்டு எண்.1 மூலத்தொப்பு அபார்ட்மெண்ட், வார்டு எண்.37 புதுத்தெரு, வார்டு எண்.33 உஸ்மான் அலி தெரு, அங்கன்வாடி மையம், வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 நல்லி அபார்ட்மெண்ட், வார்டு எண்.30 பஞ்சாயத்து போர்டு அலுவலகம், வார்டு எண்.40 மதுரை மெயின் ரோடு எடமலைப்பட்டிபுதூர், வார்டு எண்.46 லோட்டஸ் கார்டன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.63 கைலாஷ் நகர், வார்டு எண்.மாலை 22.04.2021வார்டு எண்.3 வி.எஸ் மஹால், வார்டு எண்.56 தில்லைநகர் 10வது கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: