நியூசிலாந்தில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பில்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் புதிதாக இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நியூசிலாந்தில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா பாதிப்பு
மாதிரிப் படம்
  • Share this:


கொரோனா பாதிப்பில்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் புதிதாக இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த நியூசிலாந்தில் கடந்த 24 நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படாத நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அறிவித்தார்.

இதையடுத்து கொரோனாவுக்கு முன்பிருந்த நிலைக்கு மீண்டும் சென்ற நாடாக நியூசிலாந்து மாறியது. இந்த சூழலில், புதிதாக இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.




இரண்டு பேரும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

போலீசாரை அநாகரிகமாக பேசி சோதனைச் சாவடியில் மருத்துவர் தகராறு - வீடியோ

2 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த தொழிலாளர்கள்
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading