• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை 3-ல் உச்சம் தொடும் - புதிய ஆய்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை 3-ல் உச்சம் தொடும் - புதிய ஆய்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்பாக டைம்ஸ் நெட்வொர்க் மற்றும் புரோட்டிவிட்டி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.

    அதில், சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை 3-ம் தேதி உச்சம் தொடும் என்றும் அப்போது 21,268 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டு வரும்பட்சத்தில் தொற்று பாதிப்பு ஜூலை 6-ம் தேதி உச்சத்தில் இருக்கும். அப்போது 19,054 பேர் மட்டும் சிகிச்சையில் இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோன்று தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி தொற்று பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது 30,200 பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மேலும் படிக்க...

    புதுச்சேரியில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 5ஆம் தேதி உச்சத்தில் இருக்கும் என்றும் இந்தியாவில் ஜூலை 15ஆம் தேதி கொரோனா பரவல் உச்சத்தை தொட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: