அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா: கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அறைகள் மூடல்..

சென்னையில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மூத்த அதிகாரி உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா: கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அறைகள் மூடல்..
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரி உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதிகாரிகள் பணியாற்றிய ஒரு அறை மூடப்பட்டுள்ளது.

உடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு தொற்று உறுதியானதை அறிந்த திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தன்னை தனிமைப்படுத்துக் கொண்டுள்ளார்.மேலும் படிக்க...

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு..

குரோம்பேட்டையில் 67 ஏக்கர் நிலம் வாங்கியதில் பணப்பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக அவர் அமலாக்கப்பரிவு அலுவலகத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்காக ஆஜராகியிருந்தார். ஜெகத்ரசகனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading