• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் மொத்தம் 75 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று புதியதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் உயிரிழந்ததையடுத்து அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது என்றும் கடந்தமுறை நடைபெற்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று அரசு சார்பில் உடல் மின்தகனம் செய்யவுள்ளது என்றும் கூறினார்.

மேலும் உயிரிழந்த முதியவர் கடந்த 6 நாட்களாக புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் சிகிச்சை பெற்று அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் என 19 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யவுள்ளோம் என தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் போது சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அன்பழகன் உடல் - தந்தையின் நினைவிடம் அருகே புதைக்க ஏற்பாடு

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: