தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த கடந்த 2ம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது அவரது ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்துள்ளன.அதில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.


அதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக கொரோனாவுக்கு மதுரை, விழுப்புரம், தேனியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading