• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடுப்பூசி திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும், இல்லையெனில் 6-8 மாதங்களில் 3வது அலை ஏற்பட வாய்ப்பு: ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை

தடுப்பூசி திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும், இல்லையெனில் 6-8 மாதங்களில் 3வது அலை ஏற்பட வாய்ப்பு: ஐஐடி பேராசிரியர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 6 முதல் 8 மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஹைதராபாத் ஐஐடி கல்வி நிறுவனப் பேராசிரியிரும் விஞ்ஞானியுமான எம்.வித்யாசாகர் எச்சரித்திருக்கிறார்.

  • Share this:
    தடுப்பூசித் திட்டத்தை துரித்தப்படுத்துதல், தொற்றுத் தடுப்பு வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைபிடித்தல் ஆகிய 2 விஷயங்களைப் பின்பற்றாவிட்டால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது, என்று கூறுகிறார் அவர்.

    இது தொடர்பாக பிடிஐ செய்தி ஏஜென்சிக்கு அவர் கூறுகையில், இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள சான் ரஃபேல் என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சில குறிப்புகளை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

    அந்தக் கட்டுரையின்படி, தொற்று பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் ரத்தத்தில் 8 மாதங்களில் கரோனா ஆன்ட்டிபாடிக்களின் அளவு குறைந்து தொற்று எதிர்ப்பும் குறைந்துவிடுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு எச்சரிக்கையை சுட்டிக்காட்டிய பேராசிரியர் வித்யாசாகர் மேலும் கூறியதாவது,

    "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்ட்டிபாடிக்கள் குறையத் தொடங்கினால், நோய் எதிர்ப்புத் திரனும் குறைய வாய்ப்புள்ளது. அப்போது ஏற்கெனவே நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

    அப்படி நடக்கும் பட்சத்தில் மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 6 முதல் 8 மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    இந்தியாவில் செப்டம்பர் 2020ல் கொரோனா வைரஸ் உச்சம் தொட்டத்து பின்னர் அக்டோபரில் தேசிய அளவில் குறையத் தொடங்கியது. பின்னர் மார்ச் 2021ல் இருந்து மீண்டும் தொற்று வேகமெடுத்துள்ளது.

    முதல் அலைக்குப் பின்னர் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி, கொரோனா தடுப்பு நடைமுறைகளை மிகக் கடுமையாகக் கையாண்டிருந்தால் இப்போது இரண்டாவது அலை ஏற்பட்டிருக்காது என நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

    இதே போன்ற கருத்தைத்தான் பிரதமரின் அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவனும் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். ஆனால் தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள், மாவட்டங்கள், மாநகரங்கள் எனப் பகுதிவாரியாக தீவிரப்படுத்தினால் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம் என்றும் அவர் நம்பிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: