• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா 2 ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது என்றும் கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா 2 ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது என்றும் கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கொரோனாவின் 2ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது. இதை நாம் சமாளிக்க வேண்டும்.

    இதனை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும். 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம். மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவதும், அந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்க வாய்ப்பிருக்கும் நபர்களை பாதுகாப்பதே ஒவ்வொரு நாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    விருப்பம் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல. யாருக்கு அதிகமாக நோய் தொற்று பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு” என்றனர்.

    இந்நிலையில், நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,17,32,279 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,65,0547. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,88,223 ஆக உள்ளது. மேலும், 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது.

    Must Read : விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை: காத்திருந்து ஏமாற்றமடைந்த தேமுதிக தொண்டர்கள்

     

    அத்துடன், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: