தலைவிரித்தாடும் கொரோனா 2-ம் அலை; கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள்

மாதிரிப்படம்.

நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலை கடுமையாகப் பரவி வரும் நிலையில் கேரளாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலை கடுமையாகப் பரவி வரும் நிலையில் கேரளாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

  மூணாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

  மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.20 முதல் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

  *மாநிலத்தில் நாளை (ஏப்.24) அரசு அலுவலங்கள், பொது துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில்

  பணி நாட்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்ல அனுமதியுண்டு.

  ஏப்ரல் 24, 25 ல் அத்தியாவசிய கடைகள் மற்றும் காய்கறி, பழம், பால்,மீன், இறைச்சி ஆகிய கடைகள் மட்டும் திறக்கலாம். ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் ஆகியவற்றில் உணவுகள் பார்சல் மட்டும் வழங்கலாம்.

  பள்ளிகளில் ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடக்கும். டியூசன் மையங்கள் திறக்க அனுமதியில்லை. கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படலாம்.

  மாநிலத்தில் கடைகள் இரவு 9:00 மணி வரை செயல்படலாம் என அரசு அறிவித்ததை வர்த்தகர்கள் கடை பிடித்து வருகின்றனர். ஆனால் முதல்வர் பினராயி விஜயன் கடைகள் இரவு 7:30 மணிக்கு அடைக்குமாறு நேற்று முன்தினம் கூறியதால் குழப்பம் அடைந்துள்ளனர்.

  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,263 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: