ஹோம் /நியூஸ் /கொரோனா /

Pregnancy Corona | கொரோனா 2வது அலை... கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு என தகவல்...

Pregnancy Corona | கொரோனா 2வது அலை... கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு என தகவல்...

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனா முதல் அலையினை விட 2வது அலையில் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகரித்து ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சராசரியாக மூன்றில் ஒரு கர்ப்பிணிக்கு தொற்று உறுதியானதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

  முதல் அலையில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 800 கர்ப்பிணிகளுக்கு கொரோனா ஏற்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னையில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளதாகவும், அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

  கொரோனா இரண்டாவது அலையில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அறிகுறிகள் இல்லாமலேயே தொற்று ஏற்படுவதாகவும் கர்ப்ப காலத்தில் 5 முதல் 8 மாதங்களில்தான் கர்ப்பிணிகளை கொரோனா அதிகம் தாக்குவதாகவும் அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதந்தோறும் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்வதை தவிர்த்து 5, 7 மற்றும் 9வது மாதங்களில் மட்டும் பரிசோதனைக்கு வரும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கென பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மட்டும் 30 கர்ப்பிணிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 வயதுக்கும் குறைவான திருமணமான பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப்போடவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  மேலும் படிக்க... கொரோனா தொற்றை எதிர்த்து போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யவும் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

  கர்ப்பிணிகள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கும்படியும், மிக அவசியமாக இருந்தால் மட்டும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லவும் மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CoronaVirus, Pregnancy