கொரோனா தடுப்புப்பணி பற்றி முரணான தகவல்கள்... வெள்ளை அறிக்கை கேக்கும் டி.டி.வி.தினகரன்

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

மக்களின் உயிர் சார்ந்த விஷயத்தில் தமிழக அரசு எண்ணிலடங்காத குழப்பங்களுடன் இயங்குவது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

 • Share this:
  கொரோனா தடுப்புப்பணி பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருவதாகவும் அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா தடுப்புப்பணி பற்றி தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது என்றார். மேலும், “முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை குழம்பி, தடுமாறுவது ஏன்? தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் உலகமே நெருக்கடியான சூழலைச் சந்தித்து வரும்போது மக்களின் உயிர் சார்ந்த விஷயத்தில் தமிழக அரசு எண்ணிலடங்காத குழப்பங்களுடன் இயங்குவது மிகுந்த வேதனையளிக்கிறது.

  எனவே, கொரோனா நோய் தடுப்பில் தொடக்கம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக ஆட்சியாளர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: