கொரோனா பரிசோதனையில் குழப்பமா? - CT ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை

கொரோனாவுக்கான ஆர்டி-பிசிஆர் டெஸ்டில் நெகட்டிவ் என வந்தவர்கள் பலருக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. பிசிஆர் பரிசோதனை முழுமையாக பலன் தரவில்லையா, இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கொரோனா பரிசோதனையில் குழப்பமா? - CT ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை
கோப்புப்படம்
  • Share this:
6 மாதங்களுக்கு மேலாகியும் கொரோனாவின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவை உறுதி செய்யும் பரிசோதனைக்காக ஆர்டி-பிசிஆர் எனப்படும் சோதனை நடத்தப்படுகிறது. இதில் நெகட்டிவ் என்று வந்த பலரும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

100 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 70 பேருக்கு மட்டுமே உண்மையான நிலை தெரியவருகிறது. மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வருகிறது. ஆனால் அடுத்து சில நாட்களில் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரிய வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.Also read: சொத்துக்காக மகன்கள் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர் - காவல் ஆணையரிடம் கண்ணீருடன் புகாரளித்த 80 வயது மூதாட்டி


சாதாரணமாக தொண்டை மற்றும் மூக்கில் எடுக்கப்படும் மாதிரிகளை வைத்து சோதனை செய்யும்போது கொரோனா தாக்கம் இருப்பதை துல்லியமாக கணிக்க முடிவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். எனவேதான் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் அதிகமாக இருப்பவர்கள் பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர். கொரோனா நுரையீரலைத் தாக்கும்போது அதற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்களால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரம்பத்தில் ரேபிட் டெஸ்ட் பொய்த்துப்போன நிலையில், தற்போது ஆர்டி-பிசிஆர் சோதனையும் முழுமையாக கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே, அறிகுறி அதிகமாக இருப்பவர்கள் உடனடியாக சிடி ஸ்கேன் எடுப்பதே சோதனை மேல் சோதனை வராமல் நம்மைக் காப்பாற்ற ஒரே வழியாகும்.
First published: October 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading