• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரவல் - தேர்வுத்துறை எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன?

கொரோனா பரவல் - தேர்வுத்துறை எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

அச்சத்தின் பிடியில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்கள் இயல்பான நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது.

  • Share this:
தமிழகத்தில் கொரானா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் , தேர்வை நடத்துவது மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிப்பது தேர்வுத் துறை முன் உள்ள மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன .

கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் நடக்கவேண்டிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோவான பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்று முதல் 12-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27-ம் தேதி முதல் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நிலுவையில் உள்ள 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு ஒரு தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், நடைமுறையில் அரசின் அறிவிப்பு எந்த அளவு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது .

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் எழுத உள்ள பொதுத்தேர்வின் போது சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுத்துறை எவ்வாறு தேர்வை நடத்தி முடிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 500-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதவுள்ள நிலையில் சமூக இடைவெளிக்காண விதிமுறைகள் என்ன?, மாணவர்களை எப்படி அமர வைக்கப் போகிறார்கள்? என்பது தேர்வுத்துறை முன் உள்ள முதல் சவாலாகும்.

மேலும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வராத நிலையில் மாணவர்கள் எப்படி தேர்வு மையங்களுக்கு செல்ல போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது . தனியார் பள்ளிகள் தங்கள் வாகனங்களில் மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வரும் நிலை உள்ளது.

ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலையில், தேர்வு துவங்குவதற்கு முன்பு முழுமையாக பொதுப் போக்குவரத்து துவங்கப்பட்டால் மட்டுமே கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக வருவார்கள். ஜூன் 1-க்கு முன்னர் போக்குவரத்து துவங்கப்பட வேண்டும்.

மேலும், மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகின்ற போது மாணவர்களில் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் மற்ற மாணவர்களுக்கும் தொற்று பரவக்கூடும். இதனை விவகாரத்தை தேர்வுத்துறை எப்படி கையாளப் போகிறது என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன. 11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தலா 70 க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் . ஒவ்வொரு மையத்திலும் 400-க்கும் அதிகமான ஆசிரியர்களும், பெரிய மையங்களில் 900 ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டியுள்ளது. நெருக்கமான சூழலில் ஆசிரியர்கள் எப்படி விடைத்தாள்களை திருத்த போகிறார்கள்; இதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியை பொருத்தவரை ஆசிரியர்களுக்கு முழுமையான பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டால் மட்டுமே ஒத்துழைப்பு அளிக்க முடியும் என ஏற்கனவே சில ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளது. கொரோனா அச்சத்தால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் வர தயங்குவதாக தேர்வுத்துறையின் கருத்தாக உள்ளது.

அச்சத்தின் பிடியில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்கள் இயல்பான நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தேர்வை நடத்துவதும், விடைத்தாள் திருத்தும் பணிகளை நடத்தி முடிப்பதும் தேர்வுத் துறைக்கு மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: