அடங்காத கொரோனா: முழு ஊரடங்கைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை- உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அடங்காத கொரோனா: முழு ஊரடங்கைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை- உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து முழு ஊரடங்குதான் ஒரே வழி என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து முழு ஊரடங்குதான் ஒரே வழி என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

  மகாராஷ்ராவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட காலவரையற்ற இரவு ஊரடங்கை அமல்படுத்தி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

  நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 68,020 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாலில் 291 பேர் உயிரிழந்தனர். தற்போது நாடு முழுவதும் 35,498 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1.2 கோடி பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2020 தொடங்கி தற்போதுவரை 1,61,843 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 84.5 சதவீதமாக உள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர்.

  இந்நிலையில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

  மக்களுக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர்கள் தொடர்ந்து அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்து வருகின்றனர். பொது இடங்களில் பலர் முக கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனால் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

  முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுவர். மேலும் மாநிலத்தின் ஏற்றுமதி குறையும். ஆனால் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிராவில் மக்களின் நன்மை கருதி இதனை செய்ய வேண்டி இருக்கும்.

  இவ்வாறு கூறினார் உத்தவ் தாக்கரே.
  Published by:Muthukumar
  First published: