கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் இன்ஜினியரிங் பட்டதாரி. இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக கடந்த 3 வருடமாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு சொந்த ஊருக்கு வந்த மகேஸ்வரன் ஊரடங்கு உத்தரவு தளர்வு வரும் நம் மீண்டும் வேலைக்கு செல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
ஆனால் ஊரடங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அவர் பணிக்கு மீண்டும் திரும்ப முடியவில்லை.கல்லூரி நிர்வாகமும் இவருக்கு ஊதியம் வழங்கவில்லை. மீண்டும் பணிக்கு சேர வேண்டுமென்றால் 10 மாணவர்களை அழைத்து வந்து கல்லூரியில் சேர்த்தால் உங்களுக்கு சம்பளமும் வேலையும் தருகிறோம் என்று நிர்வாகம் அவரிடம் கூறியிருக்கிறது.
இதனால் இவர் வேறு கல்லூரிக்கு வேலைக்கு செல்லலாம் என முயற்சி செய்தபோது, அங்கேயும் இதே பதிலைத்தான் கிடைத்துள்ளது. இதனால் வெறுத்துப் போன அவர் தனது சொந்த ஊரிலேயே சுயதொழில் செய்யலாம் என்று முடிவு செய்து யோசித்துக் கொண்டிருக்கும் போது, திருச்செந்தூரை சேர்ந்த அவரது மனைவி முறுக்கு சுட்டு அவருக்கு கொடுத்துள்ளார்.
அதை சாப்பிட்ட அவர் அது தனி ருசியாக இருந்ததால் இதை எப்படி செய்தாய் என்று அவரிடம் கேட்டு அதேபோல் செய்து தனது தந்தை நடத்திவரும் காய்கறி கடையில் வைத்து விற்றுள்ளார். அங்க வந்த வாடிக்கையாளர்கள் இந்த முறுக்கை வாங்கிச் சென்றனர்.
அந்த முறுக்கை வாங்கி சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு அந்த ருசி பிடித்து போய் மீண்டும் மீண்டும் வாங்கத் துவங்கினர். அதேபோல் அக்கம்பக்கத்தினரும் நிறைய வாடிக்கையாளர்கள் இந்த முறுக்கை வாங்க ஆரம்பித்தனர். இதனால் அவருக்கு நம்பிக்கை வந்து தொடர்ந்து முறுக்கு வியாபாரத்தில் ஈடுபட்டார்.
தற்போது நாளொன்றுக்கு 4 கிலோ முறுக்கு விற்பதாகவும் சுமார் 800 ரூபாய் வரை கிடைப்பதாகவும் இதில் 500 ரூபாய் லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தனக்கும் தனது மனைவி மற்றும் குழந்தைக்கும் போதுமானதாக உள்ளதாகவும் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டால் வியாபாரத்தை நெய்வேலி முழுக்க விரிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ஒவ்வொரு 18 நொடிக்கும் ஒருவர் மரணம் - 5 லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு
மேலும் பிடிக்காத மாணவர்களை கல்லூரியில் சேர்த்து தான் சம்பளம் வாங்க விரும்பவில்லை எனவும் அதனால் சுயதொழில் செய்து சுயமாக தற்போது சம்பாதித்து வருவதால் மனம் நிறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஊரடங்கால் வேலை இழந்தாலும் சோர்ந்துவிடாமல் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையைச் செய்து தனது வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் அனைவரும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College, CoronaVirus, Cuddalore, Lockdown