Home /News /coronavirus-latest-news /

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு : ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு : ஆட்சியர் அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

அத்துடன் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளூரின் பல பகுதிகளில் ஆட்சியர் மகேஸ்வரி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவடி மாநகராட்சி, பூவிருந்தவல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, திருநின்றவூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 13 கிராம பஞ்சாயத்துகளுக்கும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 7 கிராம பஞ்சாயத்துக்களும், பூவிருந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்மனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய 9 கிராம பஞ்சாயத்துகளுக்கும், மேலூர், சுப்புரெட்டிப்பாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் மற்றும் வெள்ளிவாயல்சாவடி ஆகிய 9 கிராமப் பஞ்சாயத்துக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Thiruvallur

    அடுத்த செய்தி