Corona Virus: கொரோனா பாதிப்பில் சென்னையை மீண்டும் கடந்த கோவை.. பலி எண்ணிக்கை குறையாததால் அதிர்ச்சி!

கொரோனா பரிசோதனை

இன்று ஒரு நாளில் மட்டும் 1,64,124 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் குறைந்தாலும் சென்னையை விட கோவையில் பாதிப்பின் அளவு இரு மடங்காக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பின் அளவு குறையாததால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்த மே 25ம் தேதி முதல் தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. தற்போது 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகவே தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 33,361 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 19,78,621 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய்த்தொற்றுக்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 3,13,048 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 474 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 22,289 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 1,64,124 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதே போல கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றவர்களில் 30,063 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,43,284 ஆக உயர்ந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை 2வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பில் சென்னையை கடந்திருக்கிறது கோவை. கோவையில் மட்டும் ஒரே நாளில் 4734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்ததாக சென்னையில் 2779 , திருப்பூரில் 2074, ஈரோட்டில் 1699, மதுரையில் 1395, செங்கல்பட்டில் 1392 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கையை பொறுத்தமட்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 79, செங்கல்பட்டில் 52, திருப்பூரில் 34, கோவையில் 32, சேலத்தில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Published by:Arun
First published: