2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடனம் இதுதான்.. சவப்பெட்டி நடனம் டிரெண்ட்டான பின்னணி என்ன?

2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடனம் இதுதான்.. சவப்பெட்டி நடனம் டிரெண்ட்டான பின்னணி என்ன?

கொரோனவால் பிரபலமான சவப்பெட்டி நடனம்

கானா சவப்பெட்டி நடனக் கலைஞர்கள், கொரோனா நெருக்கடியுடன் உலகம் சிக்கியுள்ள நிலையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு தங்களது  நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  2020-ஆம் ஆண்டு மனிதர்கள் உட்பட உலகில் உயிர் வாழும் ஜீவராசிகள் அனைத்திற்கும் மிகவும் மோசமான ஆண்டாகவே மாறியது. சற்றும் எதிர்பாராத வகையில் கொரோனா எனும் பேரழிவு உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கியது. இன்னும் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து மீளாத நிலையில், முகக்கவசங்கள், சானிடைசர்கள், சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகள் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறின.

  இருப்பினும், இந்த ஆண்டில் கொரோனா தவிர பல மோசமான சம்பவங்களும் நடந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது. அதே சமயம் சில வைரல் சம்பவங்களும் இணையத்தில் தீயாய் பரவின.அந்த வகையில், சவப்பெட்டி நடனம் (Coffin Dance) இந்த ஆண்டின் சிறந்த நடனமாக திகழ்கிறது. கொரோனா பேரழிவுக்கு இடையே, சில நபர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் வீடியோதான் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இந்த வீடியோ காட்சிகள் மீம்ஸ்களாகவும் பரப்பப்பட்டன.  முதலில் இதை திரைப்பட காட்சி என்று பலர் நினைத்துக்  கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் உண்மையிலேயே சவப்பெட்டி நடனக்காரர்கள் என்பது பிறகு தான் தெரிய வந்தது. இறுதிச்சடங்கில் நடனமாடுவதற்கும், சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனமாடுவதற்காகவும் இந்தக் குழு இயங்குகிறது. நம்மூர்களில் இறுதிச்சடங்கின் போது, சிலர் ஆடிக்கொண்டு செல்வார்கள். அதேபோல, உலகின் பல நாடுகளில் இப்படி இறுதிச்சடங்கில் ஆடுவதற்கென தொழில்முறை குழுக்கள் உள்ளன. கானா நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் ஐடோ என்பவர் தலைமையிலான 6 பேர்  குழு தான் சவப்பெட்டி நடனத்தை நிகழ்த்தி வருகின்றனர்.

  மிரட்டும் கொரோனா.. உலகளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு..

  இறுதி சடங்கில் சவப்பெட்டியுடன் நடனமாடுவது இறந்தவரின் ஆத்மாவுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர்கள் நம்புகின்றனர். இவர்கள் இறுதி சடங்குகளுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து, சவபெட்டியை சுமந்து நடனமாடுவர். இந்த நடனத்திற்கு விசிட்டோன் & டோனி இகி உருவாக்கிய வானியல் இசைக்கு பின்னர் இந்த வீடியோ மிகவும் பிரபலமடைந்தது. 2015-ஆம் ஆண்டிற்கு முந்தைய கானா சவப்பெட்டி நடனம் 2020-ல் கொரோனாவால் வைரலாகி பல மீம்ஸ்களுக்கு ஏற்றதாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.  இந்த நடனம் குறித்து கூகுள் குறிப்பிட்டதாவது, "கானாவில், இறுதிச் சடங்குகள் ஆடம்பரமாகவும் ஸ்டைலாகவும் கொண்டாடப்படும். தெற்கு கானாவில் நடனமாடும் பால்பேரர்கள் - நானா ஒட்டாஃப்ரிஜா பால்பேரிங் & வெயிட்டிங் சர்வீசஸை (Nana Otafrija Pallbearing & Waiting Services – the dancing pallbearers) விட வேறு யாரும் இதை சிறப்பாக செய்ததில்லை." எனக் கூறியுள்ளது.

  ஒரு பெண் தனது மாமியார் இறுதிச் சடங்கின் வீடியோவைப் பகிர்ந்த பின்னர் இந்த நடனம் 2015 இல் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தோன்றியது. ஒரு சமூக ஊடக பதிவில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணைத்து #fail என குறிப்பிட்டு மீம்ஸ்களை வெளியிட்டனர்.

  மீண்டும் ஒருமுறை வைரலான பிறகு இந்த கானா சவப்பெட்டி நடனக் கலைஞர்கள், கொரோனா நெருக்கடியுடன் உலகம் சிக்கியுள்ள நிலையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு தங்களது  நன்றியைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்ட குழு உறுப்பினர்களில் ஒருவர் “நானா ஒட்டாஃப்ரிஜாவிலிருந்து (NANA OTAFRIJA) உலகின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வரை” என கேப்ஷன் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: