முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா மரணங்கள்: தமிழ்நாட்டில் ஜூன் மாதம் உயிரிழந்தவர்கள் 14.5% பேருக்கு இணை நோய்கள் இல்லை

கொரோனா மரணங்கள்: தமிழ்நாட்டில் ஜூன் மாதம் உயிரிழந்தவர்கள் 14.5% பேருக்கு இணை நோய்கள் இல்லை

கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள 957 கொரோனா மரணங்களில் 784 மரணங்கள் ஜூன் மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை. அதில் 14.5% அதாவது 114 பேர் இணை நோய்கள் இல்லாமலும் 85.5%- 670 பேர் இணை நோய்களுடனும் இறந்துள்ளனர்.

  • Last Updated :

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள 957 கொரோனா மரணங்களில் 784 மரணங்கள் ஜூன் மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை. அதில் 14.5% அதாவது 114 பேர் இணை நோய்கள் இல்லாமலும் 85.5%- 670 பேர் இணை நோய்களுடனும் இறந்துள்ளனர்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, உடல் பருமன், நுரையீரல் சிக்கல்கள் பொதுவான இணை நோய்களாக உள்ளன.

ஜூன் மாதத்தில் மட்டும், உடம்பில் இணை நோய்கள் (Co morbidities) இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 114 பேர் ஆவர். அவர்களில் 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 84 பேர் அரசு மருத்துவமனைகளிலும் இறந்துள்ளனர்.

இணை நோய்கள் இல்லாத போதும் 50 வயதுக்கு மேலானவர்களே அதிகமாக இறந்துள்ளனர். 114 பேரில் 36 பேர், 50 வயதுக்கு கீழும் 78 பேர் 50 வயதுக்கு மேலும் இருப்பவர்கள். 50 முதல் 60 வயதில் 23 பேர். , 60 முதல் 70 வயதில் 25 பேர் , 70 முதல் 79 வயதில் 24 பேர் 80 முதல் 90 வயது வரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களுக்கு காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. அதிலும் காய்ச்சல் மற்றும் இருமல் 2 முதல் 5 நாட்கள் வரையும் மூச்சு திணறல் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மருத்துவமனைக்கு வரும் முன் இருந்துள்ளது. ஒருவருக்கு வயிற்றுப் போக்கு, மற்றொருவருக்கு தசை பிடிப்பு அறிகுறியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் அறிகுறிகள் தெரிவிக்கப்படவில்லை.

top videos

    பொதுவாக பெண்களிடம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இணை நோய்கள் இல்லாத 114 பேரில் 22 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.

    First published: