இ-பாஸ் ரத்து, பொதுப்போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ள முதல்வர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். 

இ-பாஸ் ரத்து, பொதுப்போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ள முதல்வர்
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக 6 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மாவட்டங்களில் நிலவும் கொரோனா நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நடத்திய ஆலோசனையில் தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை எளிதாக்கியதால் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் சதவீதம் உயர்ந்துள்ளதாக, சில மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவும், பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

படிக்க...விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து


படிக்க...புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு - கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்புஇந்நிலையில், மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலங்களுக்கிடையேயும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் நிலவரங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும் அன்றைய கூட்டத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்தும், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி ரத்து செய்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது, இ பாஸை ரத்து செய்வதா அல்லது தொடர்வதா என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading