• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதால் தான் தொற்று பரவுகிறது - முதல்வர்

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதால் தான் தொற்று பரவுகிறது - முதல்வர்

Youtube Video

தமிழகத்தில் தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
    சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 260 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    படுக்கை வசதிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், தனக்கு கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் கே.பி. அன்பழகனே மறுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

    இனி தினமும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை எனவும் பதிலளித்தார்.

    தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதால் தான் தொற்று பரவுகிறது எனவும் சென்னை மக்கள் வெளியூர் செல்லாமல் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் எனவும் கூறினார்.

    மேலும், சென்னையில் ஒரே நாளில் நடந்த 527 முகாம்களில் 900 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

    புதிரான புதிய நோயான கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: