Home » News » Coronavirus-latest-news » CM PALANISAMY INAUGURATED TO PROVIDE FREE MASKS AT RATION SHOPS VIN ABH

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விலையில்லா முகக்கவசங்கள் - திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர்

நியாய விலைக்கடைகளில் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விலையில்லா முகக்கவசங்கள் - திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதன்படி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை தவிர்த்து உள்ள 6909,000 குடும்ப அட்டைகளில் 4.44 கோடிநபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Also read... மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் கொரோனா சோதனை மையம் - காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்


அவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலமாக விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தரமான காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசங்கள் துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading