Home » News » Coronavirus-latest-news » CM PALANISAMY HAS LAUNCHED THE AMMA COVID 19 HOME CARE SCHEME FOR CORONA PATIENTS VIN

கொரோனா தொற்றாளர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற அம்மா கோவிட் 19 திட்டம் தொடக்கம்...!

கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கான அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றாளர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற அம்மா கோவிட் 19 திட்டம் தொடக்கம்...!
முதலமைச்சர் பழனிசாமி
  • News18
  • Last Updated: August 14, 2020, 1:55 PM IST
  • Share this:
வீட்டு தனிமையில் இருப்பவர்கள், கொரோனோ தொற்று அறிகுறி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலமாக அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2,500 ரூபாய் சலுகை விலையில் 14 நாட்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

அம்மா கோவிட் 19 திட்டத்தில் எவையெல்லாம் தரப்படும்:


14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான தொகுப்பாக வழங்கப்படும் அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு சேவை பெட்டகத்தின் விலை 2 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, உடல் வெப்பத்தை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் தெர்மோமீட்டர் கருவியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also read... மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.. சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு...தினமும் ஒன்றை பயன்படுத்தும் விதமாக 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுர குடிநீர் பவுடர் பாக்கெட்களும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.



60 அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 வைட்டமின் சி மாத்திரைகள், 14 ஸிங்க்(Zinc) மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகளுடன் கொரோனா குறித்த கையேடும் அந்த பெட்டகத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading