Home /News /coronavirus-latest-news /

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உடனடியாக ₹ 2 ஆயிரம் கோடி தேவை...! பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உடனடியாக ₹ 2 ஆயிரம் கோடி தேவை...! பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை

Youtube Video

வருகின்ற 31-ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில், தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் எனவும் கோரினார்.

    அத்துடன், நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு பெற அனுமதிக்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆணையத்தின் மானியத்தை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும், மருத்துவம், பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

    அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக கூடுதல் உணவு தானியங்கள் ஒதுக்கவும், நெல் கொள்முதலுக்கு வழிசெய்ய ஆயிரத்து 321 கோடி ரூபாய் மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    அத்துடன், வருகின்ற 31-ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி