• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள்

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து 2-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கட்டுக்கடங்காமல் தீயாய் பரவும் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    படிக்க: இன்றைய கொரோனா பாதிப்பு என்ன?

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஒவ்வொரு அமைச்சரும் தலா 3 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தவுள்ளனர்.

    இவர்கள், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளனர்.

    Also read... இந்தியாவில் அதிக தொற்று பாதிப்பு - டாப் இடத்தில் சென்னை; புதிதாக இணைந்த மற்றொரு மாவட்டம்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: