மண்டல அளவிலான கொரோனா கண்காணிப்புக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை!

”அனைத்து மண்டலங்களிலும் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”

மண்டல அளவிலான கொரோனா கண்காணிப்புக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை!
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட மண்டல அளவிலான  அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதிப்பை கண்காணிக்க  மண்டல அளவிலான சிறப்பு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.  இந்த குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்கள் 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கரூர், திருநெல்வேலி ஆகிய மண்டங்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் குழுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.


இந்த குழுக்கள், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து, அந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களையும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பரிசோதனைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது,  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பது, அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து மண்டலங்களிலும் பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனை உபகரணங்கள், முகக்கவசங்கள் போதுமான அளவில் உள்ளனவா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்வதோடு, அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Also see:
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading