எல்லைகளை மூடியது புதுச்சேரி! இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...

எல்லைகளை மூடியது புதுச்சேரி! இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக எல்லைகளை மூடி சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவர்கள் தான் கொரோனா தொற்றை பரப்பிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.இதனால்,  தமிழகத்தில் இருந்து இ-பாஸ் பெற்று புதுச்சேரிக்கு வருபவர்களுக்கும் இன்று முதல் அனுமதி கிடையாது என்று கூறிய அவர், வெளிநாட்டில் இருந்து திரும்புபவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Also read... கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு ரத்து: புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading