மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்!: ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில்  முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் வைத்துள்ளார்

தமிழகத்தில்  முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் வைத்துள்ளார்

  • Share this:
    தமிழகத்தில்  முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் வைத்துள்ளார்.

    தமிழகத்தில்  மே 10ம் தேதி முதல் இரண்டுவார கால முழு ஊரடங்கு அமலாகவுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

    அப்போது அவர்,   கொரோனா தொற்றே இனி இல்லை என்கின்ற சூழலை தமிழகத்தில் உருவாக்கவே தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது என்றும் கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாமல் தடுப்பது - கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களை முழுமையாக மீட்பது ஆகிய 2 குறிக்கோள்களை தமிழக அரசு முன்னெடுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

    முதல் அலையை விட  கொரோனா வைரஸ்  மோசமாக உருமாறியுள்ளதாகவும்  இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோரை அதிக அளவில் பாதித்து வருவதாகவும் தெரிவித்த மு.க.ஸ்டாலின், “இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களுக்குள் நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது.

    வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்கிறவர்களுடைய மரணம் அதிகமாக இருந்த நிலைமை மாறி, வேறு நோய் பாதிப்புகளே இல்லாதவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

    வட மாநிலங்களில் இருந்தும்,  பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வரும் தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டாலின்,  அந்தளவிற்கு தமிழகம் மோசம் அடையவில்லையென்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது.

    தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 2 வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு அதிகமானால், நோயைக் கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்கு மாபெரும் சவாலாக ஆகிவிடும் என அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

    ஊரடங்குக் கட்டுப்பாடுகளை போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலில் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், “இதனால், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். ஊரடங்கு காலமாக அறிவிக்கவில்லை என்றால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமானதாக ஆகிவிடும்.

    இதை உணர்ந்து அருகில் உள்ள கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள். தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது.
    இந்த 14 நாளும் ஊரடங்குக் கட்டுப்பாட்டை பயன்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

    கொரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை மனதில் வைத்து, மக்கள் எல்லோரும் செயல்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ள ஸ்டாலின்,  “சிறு அறிகுறி  இருந்தாலும் மருத்துவருடைய ஆலோசனையை பெறுங்கள், பயம் மட்டும் வேண்டாம். இது குணப்படுத்தக்கூடிய நோய் தான்.
    இது கஷ்டமான காலம் தான். அதேநேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல. நோய் நாடி, அதன் காரணமும் அறிந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்தி விடலாம்” என்று கூறினார்.

    அரசின் உடைய உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நீங்கள் எல்லோரும் நடந்துகொள்ள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்வதாகவும் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: