Home /News /coronavirus-latest-news /

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து... பின்னணி என்ன?

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து... பின்னணி என்ன?

Youtube Video

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அத்துமீறி சாலைகளில் சுற்றி போலீசாரிடம் சிக்கிய நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  உலகே ஊரடங்கில் இருந்த போது "கொரானோவை காட்டு நான் ஊரடங்கை கடைபிடிக்கின்றேன்" என்று அதீத ஆர்வகோளாரில் போலீசாரிடம் சண்டித்தனம் செய்த இளைஞரை யாரும் மறந்திருக்க முடியாது. மேலும் ஊரடங்கில் அத்துமீறல் செய்தவர்கள் மீது பதியப்பட்ட பத்துலட்சம் வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. 

  கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, ,மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல், கொரோனா ஊரடங்கை அமல்படுத்தின. ஆனால் அதன் பிறகு தான் நம் மக்கள் சாலையில் ஒன்றுகூடி அணிவகுப்பே நடத்த ஆரம்பித்தனர். அப்படி கும்பலாக சாலையில் சென்றவர்களை கொத்தாக பிடித்த போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

  ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்தில் ஹாயாக சுற்றிய இளைஞர்களை பிடித்த போலீசார் கொரோனா நோயாளி இருக்கும் ஆம்புலன்சில் ஏற்றுவதாக கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் புகழ் பெற்றது. போலீசாரிடம் சிக்கிய சிலரோ தேர்வு எழுதும் தண்டனை, தோப்புக்கரணம் முதல் பிரம்படி வரை வாங்கிய நிகழ்வுகளும் நடந்தன.

  ஊரடங்கு நேரத்தில் கொரோனாவை பார்த்து இளைஞர்கள் அச்சப்பட்டார்களோ இல்லையோ ட்ரோனை பார்த்து ஓடி மறையாதவர்களே இல்லை. சரி சாலையில் சென்றால் தானே பிரம்படி என்று ஊரின் ஒதுக்குப்புறங்களில் ஒன்றுகூடி கேரம்போர்ட் விளையாடியவர்கள், லூங்கி டான்ஸ் ஆடிய காட்சிகள் என ஏராளமான நிகழ்வுகள் நடந்தேறின.

  ஊரடங்கு காலத்தில் இதுபோன்று விதிமீறி ஒன்று கூடியவர்கள் மீது உள்ள வழக்குகளை மட்டும் கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பராசக்தி சிவாஜி கணேசன் போன்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்து பிரச்னை செய்தவர்கள் மீதுள்ள வழக்குகள் தொடரும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க... திண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடு கிடு உயர்வு

  இது ஒரு வகை என்றால் டிக்டாக் ஆர்வலர்களின் உலகம் வேறு வகை, கொரோனா காலகட்டத்தில் அவர்கள் உச்சத்தில் இருந்தனர். ஊரில் நண்பர்களுடன் பிரியாணி கிண்டி சாப்பிட்டவர்களுக்கு கூட வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கும் ஆனால் அத்துமீறி வனத்திற்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடி செய்த குற்ற வழக்குகள் ரத்தாகாது என்கிறது அரசின் செய்திக் குறிப்பு.

  இவற்றையும் தாண்டி இந்த கொரோனா ஊரடங்கு, புதிய தொழில்நுட்பங்களை கண்டுப்பிடித்த அறிவியல் மேதைகளையும் இந்த உலகத்திற்கு காட்டியது. வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்தவர் கைது.. குடும்பத்துடன் குக்கர் பீர் தயாரித்தவர் கைது கபசுரகுடிநீருடன் சேர்த்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது என புதிது புதிதாக வீட்டிலேயே கண்டுபிடித்து மதுப் பிரியர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவர்களுக்கும் வழக்குகளில் இருந்து விடுவிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (பிப்ரவரி 20, 2021)

  ஆனால் கொரோனா ஊரடங்கை மீறி சாலையில் சென்றதற்கு எல்லாமா கேஸ் போடுவாங்க எனக் கேள்வி கேட்டவர்கள் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

  வீடியோ
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CAA Protest, CM Edappadi Palaniswami, Corona

  அடுத்த செய்தி