Home /News /coronavirus-latest-news /

கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து, பின்னர்தான் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது - முதல்வர்

கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து, பின்னர்தான் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது - முதல்வர்

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் பேர் பசியாறுவதாக கூறிய முதலமைச்சர், வேளாண் பணிகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டப் பணிகள் தடையின்றி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகம் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகம் எனக் கூறியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

    ஆலோசனைக்கு முன்பு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். கொரோனா பாதிப்பை பொறுத்தவரை முதலில் உயர்ந்து, பின்னர்தான் குறையும் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனக் கூறிய அவர், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கொரோனா பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றினால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் அதிகம் என்பதால், நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக தெரிவித்த அவர், இறப்பு சதவீதம் குறைந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் கூறினார்.

    அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏப்ரல், மே மாதங்களைப் போல, ஜூன் மாதத்திலும் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் பேர் பசியாறுவதாக கூறிய முதலமைச்சர், வேளாண் பணிகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டப் பணிகள் தடையின்றி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா ஒழியும் என்ற அவர், கொரோனா குறையும் போது ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி