மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களில் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை..!
முதலமைச்சர்
  • Share this:
கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களில் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்ட வாரியாக செய்து வரும் பணிகள், எடுக்கப்பட வேண்டிய பணிகள், குறித்தும் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


மேலும் மாவட்டத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி கருத்து கேட்கயுள்ளார்.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



 
First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading