ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.இதன்படி, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது, ஊரடங்கை நீட்டிக்கலாமா, மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்தும், இ-பாஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது ஆகிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு குறித்து தமிழக அரசு முடிவுசெய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
First published: August 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading