ஹோம் /நியூஸ் /கொரோனா /

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள்

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள்

தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள்

தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடலூரில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இன்று கையெடுத்து கும்பிட்டனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுத்து வந்த நிலையிலும் தேவையற்ற காரணங்களுக்காக சிலர் இன்னும் வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் சிலர் தொடர்ந்து வெளியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் கடலூர் பாரதி சாலையில் கொரோனா ராட்ச படம் வரைந்து உங்களுக்காக காவலர்கள் மருத்துவர்கள் தூய்மை பணியாளர்கள் ஊடகதுறையினர் வீதியில் உள்ளார்கள் எனவே மக்கள் தங்களாகவே வீட்டில் இருக்க வேண்டும் என வாசங்கள் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் கடலூர் பாரதி சாலையில் கொரோனா ராட்ச படம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், டிஎஸ்பி சாந்தி ஆகியோர் தலைமையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் போலீசார், மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி விட்டு நின்று வீட்டில் இருங்கள் தனித்து இருங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு மக்களை கேட்டு கொண்டனர்.

அதன் பிறகு தங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தந்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் கைகளை தட்டி இதன் பிறகும் பொது மக்கள் ஊரடங்கு காலத்தினை சரியாக கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: Corona Warriors, CoronaVirus, Cuddalore