புதுச்சேரியில் ஊரடங்கால் மெருகேறும் சுத்தமான சுற்றுச்சூழல்..!

புதுச்சேரியில் ஊரடங்கால் மெருகேறும் சுத்தமான சுற்றுச்சூழல்..!
  • Share this:
புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் அங்கு சுத்தமான சுற்றுச்சூழல் நிலவுகிறது.

புதுச்சேரியில் 84 ஏரிகளும் 800 குளங்களும் இருப்பதாக அரசு கண்டறிந்துள்ளது. இதில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைத்து 750 ஏக்கரில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக இந்த பறவைகள் சரணாலயம் மற்றும் படகு துறை மூடப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. வாகனங்கள் ஓடாத காரணத்தால் சத்தமில்லை. தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் புகையின்றி காற்றின் மாசு குறைந்துள்ளது.


இதனால் ஊசுடு ஏரியில் நீர்சுத்தமாக இருக்கிறது.மீன்களும் நல்ல இன பெருக்கம் செய்துள்ளன.இதனால் உள்ளூர் பறவைகளான தற்போது நாம கோழி, நீர் கோழி, திரவம், நீல தாழை கோழி,புள்ளி மூக்கு வாத்து, மஞ்சள் நாரை, ஜக்கானா போன்றவையின் வரத்து அதிகமாகியுள்ளது.

இவை மட்டுமல்லாது ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டு பகுதியில் மறைந்து வாழும் முயல், முள்ளம்பன்றி, கீரப்பிள்ளை, உடும்பு, புணுகுப்பூனை போன்ற வனவிலங்குகள் வெளியில்  சுற்றுகின்றன. இதனை தொடர்ந்து பராமரிக்க சுற்றுச்சூழல் மாசுபடுவதை அரசு கட்டுப்படுத்தி ஏரி, குளம், காட்டுப்பகுதிகளை பாதுகாக்க அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading