பிளஸ் 1, பிளஸ் 2-க்கு திட்டமிட்டபடி தேர்வுகள்... பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஒத்திவைப்பு...!

பிளஸ் 1, பிளஸ் 2-க்கு திட்டமிட்டபடி தேர்வுகள்... பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஒத்திவைப்பு...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: March 21, 2020, 2:41 PM IST
  • Share this:
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மேற்கண்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை.

வரும் 27-ம் தேதி பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.


இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனினும், திட்டமிட்டபடி பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading