தாவூத் இப்ராஹிம் கூட்டாளி: நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சோட்டா ராஜன்

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 • Share this:
  நிழலுலகத் தாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி இந்த சோட்டா ராஜன். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி. 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யட்டார். தாவூத் இப்ராஹிம் பழக்கம் ஏற்பட்டது அவருக்காக இந்தியாவில் பல நாசவேலைகளைச் செய்து கொடுத்துள்ளார் சோட்டா ராஜன். அந்தக்காலக்கட்டத்தில் சோட்டா ராஜன் பெயரில் வழக்குகள் பதிவானாலும் எந்த வழக்கிலும் இவரை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை. இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் 1988-ல் சோட்டா ராஜன் துபாயில் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கிருந்து சோட்டா ராஜன் கட்டளையிட இந்தியாவில் இவருக்கு வேலைசெய்ய பலர் தயாராக இருந்தனர்.

  தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் விலகியதும் அவரது உயிருக்கு ஆபத்து வந்தது. 2000-ம் ஆண்டு பாங்காங்கில் வைத்து தாவூத் டீமின் போட்ட ஸ்கெட்சில் இருந்து நூலிழையில் உயிர்தப்பினார். இதனையடுத்து தலைமறைவு வாழ்க்கை வாழத்தொடங்கினார். 2015-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் வைத்திருந்த விவகாரத்தில் இந்தோனேசியாவில் பிடிபட்டார் சோட்டா ராஜன். விசாரணையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது. மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து இந்தியாவுக்கு அழைத்து வந்தது. போலி பாஸ்போர்ட் வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் இவருக்கு 2018 -ல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  சோட்டா ராஜனுக்கு எதிராக மும்பையில் பதிவாகியிருந்த அனைத்து வழக்குகள் இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று திஹார் சிறைச்சாலையின் சிறை அதிகாரி நீதிமன்றத்தை தொடர்புகொண்டு காணொளி காட்சி மூலம் நீதிபதி முன்பாக சோட்டா ராஜனை ஆஜர்படுத்த இயலாது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அவரை டெல்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
  நாட்டில் உள்ள மற்ற சிறைகளுக்கும் திஹார் சிறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இங்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. சோட்டா ராஜன் சிறையில் யாரையும் பார்க்க அனுமதி கிடையாது. சக சிறைவாசிகளுடனும் அவரால் தொடர்புக் கொள்ள முடியாது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: