ஹோம் /நியூஸ் /கொரோனா /

3 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் சிப் - தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

3 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் சிப் - தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் 3 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் ’சிப்’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா, இல்லையா என கண்டறிந்து, 3 நிமிடங்களில் அறிவிக்கும் புதிய பயோ சென்சார் சிப்பை தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. Molsentech மற்றும் சிப்ராக்ஸ் என்ற இருநிறுவனங்கள் கையடக்க புதிய சிப்பை கண்டுபிடித்துள்ளனர்.

Also read: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள RTpcr பரிசோதனையைப் போலவே ரத்த, சளி மாதிரிகளை இந்த சிப்பில் வைத்தால் பாசிடிவ், அல்லது நெகட்டிவ் என 3 நிமிடங்களுக்குள் முடிவை அறிவிக்கிறது.

இதனால் பலருக்கு ஒரே நேரத்தில் பரிசோதனை செய்து முடிக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முடிவுகளை கச்சிதமாக அளிக்கும் இந்த பயோ சிப்பின் விலை இந்திய மதிப்பில் 7,342 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus, Taiwan