கொரோனா அச்சம்... ரிமோட் கார் மூலம் உணவுப் பொருள்களை வாங்கும் சீனப் பெண்...!

கொரோனா அச்சம்... ரிமோட் கார் மூலம் உணவுப் பொருள்களை வாங்கும் சீனப் பெண்...!
  • News18
  • Last Updated: February 11, 2020, 11:23 AM IST
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1000ஐ தாண்டியுள்ளது. நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் அந்நாட்டு மக்கள் அடிப்படை தேவைக்காக வெளிவரக் கூட அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், ஜினான் நகரில் வசிக்கும் பெண் ஒருவர், தனது வீட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவிலுள்ள கடையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க ரிமோட் கண்ட்ரோல் காரை பயன்படுத்தியிருக்கிறார்.

வீட்டில் இருந்தபடியே அவர் தன்னுடைய ரிமோட் காரில் பொருத்தப்பட்டுள்ள தன் மொபைல் ஃபோன் கேமரா மூலம் வழிகளைப் பார்த்து காரை இயக்குகிறார். இதன் மூலம் பாதுகாவலர், கடைக்காரரோடு உரையாடி தனக்குத் தேவையானவற்றையும் பெற்றுக் கொள்கிறார். இது பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.


First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading