• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் சாதனம்: சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுப்பு!

கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் சாதனம்: சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
எலக்ட்ரான் கற்றை கதிர்வீச்சுடன் கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் கருவிகளின் தொகுப்பை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக தென் சீனாவின் ஷென்சென் நகரில் கடந்த திங்களன்று (மார்ச் 29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் , "இந்த தொழில்நுட்பம் நிபுணர் குழு மதிப்பாய்வை நிறைவேற்றியுள்ளது என்றும் குளிர் சங்கிலி உணவு பேக்கேஜிங்கிற்கான கிருமிநாசினியில் பயன்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஜெனரல் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன், சிங்குவா பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமி, தொற்று நோய்களுக்கான ஷென்சென் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஷென்சென் மூன்றாம் மக்கள் மருத்துவமனை ஆகியவை இந்த திட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. COVID-19ன் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் சீனா தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கடந்த புதன்கிழமை (மார்ச் 31) சீன உயர் மருத்துவ நிபுணர் ஒருவர் கூறிய அதே நாளில் இந்த செய்தியும் வெளியாகியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் உலகளவில் பரவி இன்னும் முடிந்தபாடில்லை. இந்த, கொரோனா வைரஸ் உஹான் மாகாணத்தின் மிகப்பெரிய இறைச்சி சந்தையில் தான் முதன்முதலில் தோன்றியது என்றும், சீனா தனது உஹான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகின.

எனவே, கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, ஆய்வகங்களில் இருந்து பரவியதா என்பது குறித்து சீனாவில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவினர் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பான ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும் சீனா மற்றும் உலக சுகாதார மையம் சேர்த்து தயாரித்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. பரிசோதனை கூடத்தில் இருந்து வைரஸ் கசிந்ததற்கு சிறிதும் கூட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி கிளம்பியுள்ளது. சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பால் COVID-19 இன் தோற்றம் குறித்த கூட்டு ஆய்வு குறித்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சர்வதேச புலனாய்வாளர்களிடமிருந்து தரவை சீனா தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால் கூட்டு ஆய்வின் இணைத் தலைவராக இருந்த லியாங் வன்னியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு தரப்பிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் விசாரணை முழுவதும் ஒரே தரவை அணுகுவதாகவும், அணுகல் இல்லாமை குறித்த கூற்றுக்களில் உண்மை இல்லை என்றும் கூறினார். "நிச்சயமாக, சீன சட்டத்தின்படி, சில தரவுகளை எடுத்துச் செல்லவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முடியாது. ஆனால் நாங்கள் அதை வுஹானில் ஒன்றாக ஆராய்ந்தபோது, தரவுத்தளத்தையும் பொருட்களையும் பார்க்க முடிந்தது. இந்த ஆய்வுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் மேலும் கூறினார்.

Also read... தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இளைஞர்களிடம் அதிகம் உள்ளது

நிபுணர் குழுவிற்கு முழுமையான தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சீன ஆய்வாளர் லியாங், எந்தவொரு விஞ்ஞானிக்கும் சரியான தகவல்கள் இல்லை என்று கூறினார். அறிக்கையின் வெளியீடு மீண்டும் மீண்டும் தாமதமானது என்ற புகார்களையும் அவர் நிராகரித்தார், "ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு தரவுகளும்" வெளியிடப்படுவதற்கு முன்னர் இரு தரப்பினரால் சரிபார்க்கப்பட வேண்டும் என்று இறுதியாக தெரிவித்தார். இந்த நிலையில் சீனா கொரோனா வைரஸை முடக்கும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறி வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: