கொரோனாவில் இருந்து தப்பிக்க 12 மாஸ்க் அணிந்த சீன ஓட்டுநர்... வைரல் வீடியோ !

கொரோனாவில் இருந்து தப்பிக்க  12 மாஸ்க் அணிந்த சீன ஓட்டுநர்... வைரல் வீடியோ !
கொரோனா
  • Share this:
கொரோனா வைரஸில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சீனர் ஒருவர் தனது முகத்தில் 12 மாஸ்க் அணிந்து கொண்ட செயல் இணையத்தில் வைரல் வருகின்றது.

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 630 - ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே அங்கு போதுமான மருத்துவ மனைகள் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதற்காக ஊஹானில் Leishenshan என்ற மருத்துவமனை 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள சீனர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இதற்கிடையே சீன ஓட்டுநர் ஒருவர் தனது முகத்தில் 12 மாஸ்க் அணிந்து கொண்ட செயல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.


இந்த விடியோவை சீனாவை சேர்ந்த செய்தி தாள் நிறுவனம் (South China Morning Post) தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சீனாவில் வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டுநர் வைரஸ் தாக்குதல் தொடர்பான வெப்பநிலை பரிசோதனையின் போது மாஸ்க்கை சீன போலீசார் அகற்ற கூறிய நிலையில் 11 மாஸ்க் அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், வைரஸ் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவே இவ்விதம் அவர் செய்ததாக இந்த வீடியோவில் தெரிவிக்கபட்டுள்ளது.

 


Also see... சிம்பாவைப் பாதுகாக்கும் பபூன்: தாயில்லாத சிங்கக் குட்டியை சுமந்து திரியும் குரங்கு - மனதை உருக்கும் நிகழ்வு

கொடிய விஷமுள்ள பாம்பை விழுங்கிய தவளை...உயிருடன் வாழும் அதிசயம்!
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading