சீனாவில் கொரோனா பாதிப்பு... பாதியில் நின்ற திருமணங்கள்... இறுதிச் சடங்குகளைக் கூட சத்தமில்லாமல் முடிக்க உத்தரவு...!

கோப்புப் படம்

Corona |

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் திருமணங்களை ரத்து செய்யவும், இறுதிச் சடங்குகள் போன்றவற்றை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

  கொரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 300- க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், சுமார் 12,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்பட்டது. காரணம் 02.02.2020 என்ற இந்த தேதியை திருப்பி வாசித்தாலும் நேரே வாசித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

  இதனால், இந்த நாளை அதிர்ஷ்டமாக கருதி சீனர்கள் அதில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்களை நடத்த முன்னரே திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருப்பதால், இது போன்ற நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டால் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பிருப்பதாக கூறி அரசு, பிப்ரவரி 2-ம் தேதி நடத்த இருந்த திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சீன அரசு, “பிப்.2-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்களை ரத்து செய்துவிடுங்கள். தற்போது நிலவும் அசாதாரண சூழலை மற்றவருக்கு விவரியுங்கள்.” என்று கூறியிருந்தது..

  மேலும் மரண இறுதிச் சடங்குகளையும் அதிக கூட்டம் சேராமல் விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இறந்திருந்தால் அவர்களின் உடலை உடனே புதைத்துவிடவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

  அதுமட்டுமில்லாமல் தற்போது சீனாவில் நாடு முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: