கோவிட் 19 வைரஸின் பிறப்பிடத்தில் மூன்றாவது நாளாக புதிய பாதிப்புகள் இல்லை...!

கோவிட் 19 வைரஸின் பிறப்பிடத்தில் மூன்றாவது நாளாக புதிய பாதிப்புகள் இல்லை...!
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: March 21, 2020, 2:08 PM IST
  • Share this:
கோவிட் 19 வைரஸின் பிறப்பிடமான சீனாவின் ஊஹானில் மூன்றாவது நாளாக புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார கவுன்சில் கூறியுள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து வைரஸ் ஒன்று மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது.

சீனாவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகம் எச்சரிக்கை ஆனது. எனினும், இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணி சிக்கலானது என்பதால், வைரஸ் சீனாவைத்தாண்டி வெளிநாடுகளுக்கும் பரவத்தொடங்கியது.


தற்போது வரை உலகம் முழுவதும் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்பொது வரை, சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

மனித குலத்திற்கே அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு கொரோனாவை அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் என்று பல நாடுகள், தனியார் நிறுவனங்கள் கோவிட் 19 வைரஸ் தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சோதனை முயற்சியாக தடுப்பு மருந்துகளை செலுத்தும் முயற்சியிலும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இறங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சாக நடந்த நிலையில், தற்காலிக மருத்துவமனைகளில் இருந்தவர்கள் குணமாகியதால் அவைகள் மூடப்பட்டன.கொரோனாவின் தொடக்கமான ஊஹானிலும் பாதிப்பு முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீனா கூறுகிறது. ஊஹான் மாகாணத்தின் தலைநகரான ஹுபேயில் கடந்த 3 நாட்களாக புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய 41 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்பு முற்றிலும் அடங்கிவிட்டதாகவும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் புதிக எண்ணிக்கை வருவதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்