சீனாவிலும் பரவியது உருமாறிய கொரோனா
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

உருமாறிய கொரோனா
- News18 Tamil
- Last Updated: January 1, 2021, 2:13 PM IST
உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர இந்தியா, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் ஃபைசர் தடுப்பூசிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வைரஸ் கடந்த செப்டம்பர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்ட வைரஸ், பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசுடன் தொடர்புடையது அல்ல என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை மாற்றமடைந்தததாக தெரிவித்துள்ளனர்.இந்த உருமாற்றங்களினால் நோயாளிகளின் அறிகுறிகள், பாதிப்புகள் மாறுபடுவோ தீவிரமடையவோ இல்லை. இதனால் சிகிச்சை முறையில் மாற்றம் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இதனிடையே, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் ஃபைசர் தடுப்பூசிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வைரஸ் கடந்த செப்டம்பர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்ட வைரஸ், பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசுடன் தொடர்புடையது அல்ல என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்