சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று... அவசர நிலை பிரகடனம்

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று... அவசர நிலை பிரகடனம்

கொரோனா வைரஸ்

பீஜிங்கில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது.

 • Share this:
  கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவிய இந்த வைரசின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரசாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது.

  இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீன தலைநகர் பீஜிங்கில், 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இதனால், அந்நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலையை சீனா பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினாவில் பரவும் பாதிப்புகள் அனைத்தும் லியோனிங் மாகாணத்தில் பதிவாகி இருக்கின்றது என சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  இந்நிலையில், தொற்று பரவலை தடுக்க சீனா அவசர நிலையை அறிவித்திருப்பதாகவும், இதனால், பீஜிங்கில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  Published by:Suresh V
  First published: