சீனாவில் குறைந்தது கொரோனா இறப்பு விகிதம்..!

சீனாவில் குறைந்தது கொரோனா இறப்பு விகிதம்..!
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான சீனாவில் முதன்முறையாக இறப்பு எண்ணிக்கை பெருமளவில் சரிந்துள்ளது. கொரோனா வைரஸின் மையப்புள்ளியான ஊஹான் நகரம் மற்றும் அது சார்ந்துள்ள ஹூபெய் மாகாணத்தில் கரோனா பாதிப்பால் நேற்று 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சீனாவில் 29 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் ஹூபெய் மாகாணத்தில் தினமும் சராசரியாக 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 14,840 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் நேற்றைய நிலவரப்படி புதிதாக 409 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது சீனாவிற்கு சற்றே ஆறுதல் அளித்திருக்கிறது.


 Also see...சீனாவின் ஊஹானிலிருந்து அழைத்துவரப்படும் 112 இந்தியர்கள்!

கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!

 
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading