குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன...?

12 வயதுக்கு மேலான குழந்தைகளை பெரியோர்கள் போல கருதி அவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன...?
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 27, 2020, 3:09 PM IST
  • Share this:
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படும் நிலையில் குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி பல பெற்றோர்களிடம் எழுகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் மருத்துவர்களும் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளனர்.

ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்களுக்கு என்ன பிரச்னை என்று சொல்ல தெரியாத வயதில் இருப்பதாலும் அவர்கள் மூலமாக நோய் பரவல் மிக குறைவு என்பதாலும் முக கவசம் வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.Also read... இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் விகிதம் அதிகரிப்பு..


ஆறு வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் இடங்களில் மட்டும் முக கவசம் அணியலாம் என்றும் 12 வயதுக்கு மேலான குழந்தைகளை பெரியோர்கள் போல கருதி அவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆரோக்யமான குழந்தைகளுக்கு பொதுவாக துணியால் ஆன முககவசம் அணிந்தால் போதுமானது. ஆஸ்துமா, புற்றுநோய் என பிற நோய்கள் இருந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தால், பெரியவர்கள் போன்ற முக கவசம்- மூன்று அடுக்கு முக கவசம் அல்லது என் 95 கவசம் அணிய வேண்டும். பள்ளிகள் திறந்த பிறகு மூச்சிறைக்கும் உடல் பயிற்சி செய்யும் போது முக கவசம் அணிய கூடாது.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading