முகப்பு /செய்தி /கொரோனா / குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா 2-வது அலை... மருத்துவர்கள் எச்சரிக்கை

குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா 2-வது அலை... மருத்துவர்கள் எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில், 12 வயதிற்கு உட்பட் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக மருத்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஒருநாள் கொரோனா பாதிப்பு 7000-ஐ கடக்காத நிலையில், இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது கணிக்க முடியாத அளவிற்கு கட்டுங்கடங்காமல் அதிகரித்து வருகிறது. தற்போது ஒருநாள் தொற்று பாதிப்பு 15000-ஐ கடந்துள்ளது. குறிப்பாக, இரண்டாவது அலையில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், தொற்று பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது.

2020 டிசம்பர் 31 வரை மொத்தம் 8,86,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 12 வயதிற்கு உட்பட்ட 32,445 குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் பாதிப்பு 3.28 சதவீமாக இருந்தது. கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது.

இதில், 12 வயதுக்கு உட்பட்ட 40,323 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 20,439 பேர் பெண் குழந்தைகள், 19884 பேர் ஆண் குழந்தைகள் ஆகும். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3.62 சதவீதமாகும். அறிகுறியுடன் இருப்பவர்கள் வீடுகளில் முறையாக தனிமைப்படுத்திக் கொள்ளாததால் குழந்தைள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    குறிப்பாக கடந்த ஒரு 5 நாட்களில் மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து 500-க்கு மேலாக அதிகரித்துள்ளது. இதனால், குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் வீடுகளிலும் அனைவரும் முகக் கசவம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    First published:

    Tags: CoronaVirus